முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Eeswaran Official Teaser | கடவுளை சிரிக்கவைக்க சிம்பு சொல்லும் ஐடியா.. கலக்கலான ஈஸ்வரன் டீசர் ரிலீஸ்..

Eeswaran Official Teaser | கடவுளை சிரிக்கவைக்க சிம்பு சொல்லும் ஐடியா.. கலக்கலான ஈஸ்வரன் டீசர் ரிலீஸ்..

ஈஸ்வரன் பட ஸ்டில்

ஈஸ்வரன் பட ஸ்டில்

தீபாவளியை முன்னிட்டு‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.

இதையடுத்து படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட்லுக் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு அதிகாலை 4.32 மணிக்கு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது ‘ஈஸ்வரன்’ டீம்.

டீசரில் தனது உடல் எடையைக் குறித்து நியூ லுக்கில் தோன்றியிருக்கிறார் சிம்பு. டீசரின் ஒரு காட்சியில் பாரதிராஜாவிடம் கடவுளை சிரிக்க வைக்க என்ன பன்ண வேண்டும் எனத் தெரியுமா என்று கேட்கும் சிம்பு, நம்முடைய திட்டத்தை சொன்னாலே போதும் கடவுள் விழுந்து விழுந்து சிரிப்பார் என்கிறார். கலக்கலான இந்த டீசர் சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக அமைந்திருப்பதோடு யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்திருக்கிறது.

மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக களமிறங்கியுள்ளது படக்குழு.

' isDesktop="true" id="370193" youtubeid="Dh2JaRKTnOg" category="cinema">

இத்திரைப்படத்தின் ஒட்டு மொத்த பணிகளையும் முடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

First published:

Tags: Eeswaran Movie, Simbu