சுவாரஸ்யமாக எதாவது செய்யும் வரை தான் தொடர்ந்து நடிப்பேன் என்றும், இல்லையெனில் நடிப்பை விட்டு விட்டு வேறு வேலை செய்வேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள சௌத் சென்சேஷன் நடிகர் சித்தார்த் கடந்த சில காலமாக இந்தி படங்களில் இருந்து விலகி இருந்தார். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எஸ்கேப் லைவ் மூலம் மீண்டும் இந்திக்கு திரும்பியுள்ள சித்தார்த், இந்தி படங்களிலிருந்து விலகி இருப்பது பற்றி மனம் திறந்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய சித்தார்த், இந்தி சினிமா மற்றும் தொடர்களில் ஏதாவது சுவாரஸ்யமாகச் செய்ய வேண்டும் என்றார். “நான் ஒரு டெல்லி பையன் என்பதை மக்கள் பல நேரங்களில் மறந்துவிடுகிறார்கள். சரளமாக இந்தி பேசக்கூடியவன் நான்.
மகள்களுக்காக காத்திருக்கிறேன்.. மறுமணத்திற்கு பின் டி.இமான் உருக்கம்!
ஆனால், நான் தென்னிந்திய சினிமாவில் நிறைய வேலை பார்த்திருக்கேன். அதனால், ஒவ்வொரு முறை இந்திக்கு வரும்போதும் அது ஒரு ஹாபியாக இருக்கும். எனக்கு ஏதாவது சுவாரஸ்யமாக படும்போது, அதை தவறவிட மாட்டேன். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு சந்தோசம். இது வழக்கமான பாத்திரம் அல்ல. வித்தியாசமாக ஏதாவது செய்யும் வரை நான் நடிப்பேன், இல்லையெனில் நடிப்பதை விட்டு விட்டு வேறு வேலை செய்வேன்” என்றார்.
பிரியங்கா சோப்ரா முகத்தில் காயங்கள்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தத் தொடருக்கான படப்பிடிப்பில் உள்ள சவால்களைப் பற்றி மேலும் பேசிய சித்தார்த், “இது மிகவும் கடினமான படப்பிடிப்பு, ஏனெனில் உண்மையானதாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டோம். சமூகத்தில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. எனவே, இத்தொடரில் எனது கதாபாத்திரம் மிகவும் வலுவான கருத்துக்களைக் கொண்டுள்ளது” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Siddharth