Home /News /entertainment /

முந்தைய சர்ச்சை ட்வீட்களால் மீண்டும் சிக்கலில் சித்தார்த்?

முந்தைய சர்ச்சை ட்வீட்களால் மீண்டும் சிக்கலில் சித்தார்த்?

சித்தார்த்

சித்தார்த்

இந்த பிரச்னை முடிவுக்கு வரும் எனப் பார்த்தால், அவரின் முந்தைய சர்ச்சையான ட்வீட்கள் மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

  சமூக வலைதள சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் சித்தார்த் கடந்த சில நாட்களாக மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

  கடந்த ஜனவரி 5-ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

  இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவாலும் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். 'எனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

  சாய்னாவின் அந்த ட்வீட்டுக்கு, “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார் நடிகர் சித்தார்த்.  இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த விஷயம் கடும் விமர்சனத்தைக் கிளப்பியது. தேசிய மகளீர் ஆணையம் சித்தார்த்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி பரிந்துரை செய்தது. பெண் செயற்பாட்டாளர், பிரபலங்கள் என பலர் சித்தார்த்துக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.  இந்த விவகாரம் தீவிரமானதைத் தொடர்ந்து சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார் சித்தார்த். அதில், “எனது ட்வீட்டில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவையாக இருக்க முடியாது. சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  தவறுக்கு சித்தார்த் மன்னிப்பு கோரியதால், இந்த பிரச்னை முடிவுக்கு வரும் எனப் பார்த்தால், அவரின் முந்தைய சர்ச்சையான ட்வீட்கள் மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. முன்பு செய்தியாளர் ஒருவர் பற்றி சித்தார்த் சர்ச்சையான வகையில் குறிப்பிட்டிருந்தார். அதோடு நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைத்தன்யாவை விவகாரத்து செய்த போதும், சித்தார்த் அதை விமர்சனம் செய்யும் வகையில் மறைமுகமாக ட்வீட் போட்டிருந்தார். நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொள்ளும் முன்பு சமந்தா சித்தார்த்தை காதலித்தார். ஆனால் ஏதோ பிரச்னைகளால் அந்த உறவு நீடிக்கவில்லை.  அதுமட்டுமல்லாமல், கடந்த டிசம்பரில் தமிழக போலீஸ் காவலில் மாணவர் ஒருவர் இறந்தபோது அதை நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு சமம் என்று சித்தார்த் கூறியிருந்தார்.  கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாட்டில் பெரியாருக்கு சிலை வைக்க திமுக அரசு முயல்வதாக செய்திகள் வெளிவந்தபோது, சிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் பெரியார் என்று நடிகர் சித்தார்த் விமர்சித்தார். பின்னர் பெரியாருக்கு சிலை வைப்பது தமிழக அரசு இல்லை என்றும், பெரியார் சுயமரியாதை பிரசார அறக்கட்டளை என்றும் தெளிவுப்படுத்தப்பட்டது.

  ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

  இது தவிர, அரசியல் தொடர்பான விஷயங்களில் சில பெண் அரசியல்வாதிகளையும் கேலி செய்து பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் சித்தார்த். இதையடுத்து அவருக்கு எதிரான புகார்களை ஒன்று திரட்டி, தேசிய மகளீர் ஆணையர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Siddharth

  அடுத்த செய்தி