• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்ச்சையான ட்வீட் - சித்தார்த் விளக்கம்!

சர்ச்சையான ட்வீட் - சித்தார்த் விளக்கம்!

சித்தார்த்

சித்தார்த்

என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல என கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நேரம் சித்தார்த், ட்விட்டரில் போட்ட ஒரு கமெண்ட் சர்ச்சையானது. அதற்கு சித்தார்த் விளக்கமளித்துள்ளார். 

சமந்தா முதலில் காதலித்தது நடிகர் சித்தார்த்தை. சித்தார்த்துக்கு அதற்கு முன் ஸ்ருதிஹாசன் உள்பட பல காதல்கள் இருந்தன. சித்தார்த், சமந்தா காதல் அதிக நாள் நீடிக்கவில்லை. சமந்தா சித்தார்த்துடனான தனது காதலை முறித்துக் கொண்டு நாக சைதன்யாவை தேர்ந்தெடுத்தார். இந்தப் பின்னணியில், சமந்தா, நாக சைதன்யா பிரிந்த நேரம் சித்தார்த்த போட்ட ட்வீட் சமந்தாவுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கப்படும் என்பதும் சாமானியனுக்கும் தெரிந்த ரகசியம்

"பள்ளியில் ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட முதல் படம், ஏமாற்றுகிறவர்கள் வெற்றி பெறுவதில்லை" என சித்தார்த் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். சமந்தாவை குறி வைத்து சித்தார்த் இதனை எழுதியதாக அவர் மீது பலரும் குற்றம்சாட்டினர். கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் மகா சமுத்திரம் திரைப்படம் குறித்து தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில், தனது ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கமளித்துள்ளார்

Also read... ஜீவா, மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கும் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப்!

"யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட்டை போடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை வைத்து அதனைப் போட்டேன். என்னுடைய மகா சமுத்திரம் படம்கூட அப்படியான ஒரு விஷயத்தைத்தான் கையாண்டிருக்கிறது. யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்.

என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல" என கூறியுள்ளார். அத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம். "என்னுடைய வீட்டிற்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால், என்னைத்தான் அப்படிச் சொன்னார் என்று யாரும் புகார் சொல்லக் கூடாது" என்று இன்னொரு உதாரணத்தையும் கூறியுள்ளார்.  விளக்கம் என்ற பெயரில் விவகாரத்தை பெரிதாக்கியிருக்கிறார் சித்தார்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: