முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம்... ஜோடியாக வந்து ஷாக் கொடுத்த சித்தார்த் - அதிதி

பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம்... ஜோடியாக வந்து ஷாக் கொடுத்த சித்தார்த் - அதிதி

சித்தார்த் - அதிதி ராவ்

சித்தார்த் - அதிதி ராவ்

அதிதி ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்ட சித்தார்த், அதில் என் இதயத்தின் இளவரசியே என குறிப்பிட்டிருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்துவருகிறார். அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.

சமீபத்தில் கூட மதுரை விமான நிலையத்திற்கு அவரது குடும்பத்தினரிடம் வந்தபோது அதிகாரிகள் ஹிந்தியில் பேசியதாகவும், ஆங்கிலத்தில் பேச சொன்னபோது மறுத்து ஹிந்தியிலேயே பேசியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்துவருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது. தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் ஷர்வானந்த்தின் நிச்சயதார்த்தத்தில் சித்தார்த் - அதிதி ராவ்

இருவரும் இயக்குநர் மணிரத்னத்தின் அறிமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி. அதே போல மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சித்தார்த், அவரது இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

top videos

    சில மாதங்களுக்கு முன் அதிதியின் பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்ட சித்தார்த், அதில் என் இதயத்தின் இளவரசியே என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் ஷர்வானந்த்தின் நிச்சயதார்த்தத்துக்கு சித்தார்த்தும் அதிதியும் ஜோடியாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மகாசமுத்திரம் படத்தில் ஷர்வானந்த், சித்தார்த், அதிதி ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Actor Siddharth, Actress Aditi Rao Hydari