மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் சித் ஸ்ரீராம்!

news18
Updated: July 9, 2019, 5:02 PM IST
மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் சித் ஸ்ரீராம்!
சித் ஸ்ரீராம், மணிரத்னம்
news18
Updated: July 9, 2019, 5:02 PM IST
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். தொடர்ந்து அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர்ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் பாடியுள்ள சித் ஸ்ரீராமுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அவர் தயாரிப்பில் உருவாகும் வானம் கொட்டட்டும் படத்துக்கு இசையமைக்க ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை வசனத்தை படை வீரன் பட இயக்குநர் தானா மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து எழுதியுள்ளனர்.

வீடியோ பார்க்க: சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் படங்கள்!

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...