Home /News /entertainment /

ஜூலையில் வெளியாகிறது ஆண்ட்ரியா நடித்துள்ள வட்டம்

ஜூலையில் வெளியாகிறது ஆண்ட்ரியா நடித்துள்ள வட்டம்

வட்டம்

வட்டம்

ஆண்ட்ரியா, சிபி சத்யராஜ் நடித்துள்ள வட்டம் திரைப்படம் ஜூலை இறுதியில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

  • News18
  • Last Updated :
சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் ஜூலை இறுதியில் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் வெளியாகிறது.

மதுபானகடை கமலகண்ணன் இயக்கத்தின் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான திரைப்படம் வட்டம். இந்த திரைப் படத்திற்கான வேலைகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. மேலும் இந்த திரைப்படத்தை ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஒப்பந்தமானது.

ஆனால் எஸ்.ஆர். பிரபு தயாரித்த டாணாக்காரன், ஓ2 படங்கள் வெளியான பிறகே இந்தப் படத்தை  வெளியிட வேண்டும் என முடிவெடுத்தனர். அதன்படி முதல் இரண்டு படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன.



இந்த நிலையில் வட்டம் படத்தை வெளியிடும் வேலையில் படக்குழு இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். மேலும் படம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Also read... என் அறியாமையை உணர்கிறேன்... பஞ்சாங்க சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாதவன்!

அதன்படி ஜூலை மாத இறுதியில் வட்டம் வெளியாகிறது. சிபி சத்யராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றியடைவில்லை. இதனால் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் வெளியாகும் வட்டம் படம் நிச்சயம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சிபிராஜ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Andrea Jeramiah

அடுத்த செய்தி