முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூப்பர் சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்...!

சூப்பர் சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்...!

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசனின் சினிமா கரியர் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பரவலாகவும் அழுத்தமாகவும் அமைந்தது. முக்கியமாக தெலுங்கில் பவன் கல்யாண், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுடன் தொடர்ச்சியாக நடித்தார்

  • Last Updated :

தொடர்ந்து அறுபது பிளஸ் நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதி ஹாசனின் சினிமா கரியர் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பரவலாகவும் அழுத்தமாகவும் அமைந்தது. முக்கியமாக தெலுங்கில் பவன் கல்யாண், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுடன் தொடர்ச்சியாக நடித்தார்

சென்ற வருடம் அவரது நடிப்பில் க்ராக், வக்கீல் சாப் ஆகிய தெலுங்குப் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்தியில் தி பவர் என்ற படம் வெளியானது. தமிழில் லாபம். பிரபாஸுடன் சலார் படத்திலும் நடித்து வருகிறார்.

சொந்தப் பிரச்சனைகளால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். முதல் படமாக க்ராக் இயக்குனர் மலினேனி கோபிசந்த் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் 61 வயது சூப்பர் சீனியர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி. இதையடுத்து சிரஞ்சீவியுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிரஞ்சீவி பாலகிருஷ்ணாவைவிட சீனியர். 66 வயது.

Also read... துர்கா படத்தின் இயக்குனர்களை அறிவித்த ராகவா லாரன்ஸ்...!

சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா படம் தயாராகி அடுத்த மாதம் வெளியாகிறது. தற்போது லூசிபர் படத்தின் ரீமேக்கான காட்ஃபாதர், வேதாளம் படத்தின் ரீமேக்கான போலா சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து பாபி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

Also read... சமந்தாவுக்கு போட்டியாக நடனத்தில் பட்டையை கிளப்பும் ரெஜினா...!

top videos

    இதில் அவரது ஜோடியாக நடிக்க ஸ்ருதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முக்கியமான விஷயம் சிரஞ்சீவியின் ஆச்சார்யாவில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் காஜல் அகர்வால். போலா சங்கரில் தமன்னா. இருவருமே ஸ்ருதியைவிட மிக இளையவர்கள்.

    First published:

    Tags: Actress shruti Haasan