உங்களுடைய அப்பாவாக இருந்தாலும்... நெட்டிசன் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்

தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

news18
Updated: April 14, 2019, 12:38 PM IST
உங்களுடைய அப்பாவாக இருந்தாலும்... நெட்டிசன் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்
கமல்ஹாசன் | ஸ்ருதிஹாசன்
news18
Updated: April 14, 2019, 12:38 PM IST
அப்பாவுக்குத்தான் எனது வாக்கு என்று எப்படி சொல்லலாம் என்று கேள்வி எழுப்பிய நெட்டிசன் ஒருவருக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பதிவில், உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா. மேம்பட்ட எதிர்காலத்துக்காக இந்த சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது.

அதை உங்களது முயற்சி, ஆர்வம், உண்மை மூலமாக கண்டுள்ளீர்கள். உங்களுக்கும், உங்கள் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உங்கள் டார்ச் லைட் மூலம் ஒளிமயமான எதிர்காலம் வரவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

ஸ்ருதிஹாசனின் இந்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவரைப் பின் தொடரும் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், எனது வாக்கு உங்களுக்குத் தான் என்று எப்படி சொல்லலாம். உறவு என்பதைத் தாண்டி, எந்த வேட்பாளர் சரியானவர் என தேர்வு செய்ய வேண்டும். அது உங்களுடைய அப்பாவாக இருந்தாலும்” என்று கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், எனது அப்பா என்பதால் ஓட்டு இல்லை. மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதால் தான் எனது வாக்கு அவருக்கு” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: கமல்ஹாசன் உடன் சிறப்பு நேர்காணல்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...