Shruti Haasan: தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சுருதி ஹாசன் இந்தியில் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தார். 2009-இல் அவர் நடித்த லக் இந்தித் திரைப்படம் தான் சினிமாவில் அவரது அறிமுகம்.
நீங்க தென்னிந்தியாவில் இருந்து வர்றீங்க. இந்தி பேசுவீங்களா? என்று கேட்ட இந்திவாலாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் சுருதிஹாசன்.
வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு - அவர்கள் அரசியல் தலைவர்களாக இருந்தாலும், சமூக செயற்பாட்டாளராக இருந்தாலும், திரைத்துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும், சாதாரண பொதுஜனமாக இருந்தாலும் இந்தியா என்பது அவர்களைப் பொறுத்தவரை வட இந்தியா மட்டுமே. மகாராஷ்டிராவுக்கு இந்தப் பக்கம் இருக்கும் மாநிலங்களை அவர்கள் இந்தியாவாக கருதுவதில்லை. தென்னிந்தியா என்ற அடைமொழி உடனே இப்போதும் குறிப்பிடுகின்றனர். பேச்சிலிருந்து பட்ஜெட் வரை இந்தப் பாகுபாடு இருப்பதை நாம் பார்க்கலாம்.
திரையுலகில் இந்த இந்திய சினிமா - தென்னிந்திய சினிமா என்ற பாகுபாடு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவுக்கான விருதுகள் என்று இந்திப் படங்களுக்கு மட்டும் பிலிம்பேர் விருது வழங்கப்பட்டு வந்தது. மம்முட்டி போன்ற கலைஞர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து பேசிய பிறகு, தென்னிந்திய திரைப்பட விருது என்று ஒன்றை உருவாக்கி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளப் படங்களுக்கான விருதுகளை தனி விழாவாக எடுத்து வழங்க ஆரம்பித்தனர். இந்தப் பாகுபாடுகள் இன்னும் தொடர்கின்றன.
வட இந்தியர்களின் இந்திய மனநிலையில் தென்னிந்தியாவுக்கு இடமில்லை. இந்த புத்தியுடன் சுருதிஹாசனிடம் ஒருவர், "தென்னிந்தியாவிலிருந்து வர்றீங்க. இந்தி பேசுவீங்களா?" என்று கேட்க, "தென்னிந்தியா என்ன வேற்று கிரகமா? நாம் எல்லோரும் படங்கள் எடுக்கிறோம். எல்லோரும் கடுமையாக உழைக்கிறோம். பாரபட்சம் பார்ப்பதற்கு 2022 இல் இடமில்லை" என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சுருதி ஹாசன் இந்தியில் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தார். 2009-இல் அவர் நடித்த லக் இந்தித் திரைப்படம் தான் சினிமாவில் அவரது அறிமுகம். தமிழ், தெலுங்கை விட அவர் இந்தியில்தான் அதிக பங்களிப்பு செய்திருக்கிறார். இந்தி சரளமாக அவருக்கு பேசவும் தெரியும். எனினும் அவரை தென்னிந்தியர் என்றே வகைப்படுத்துகிறார்கள் வடக்கே உள்ளவர்கள். அதன் வெளிப்பாடே இந்த கேள்வியும், சுருதிஹாசனின் விளாசல் பதிலும்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.