ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹாலிவுட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன்!

ஹாலிவுட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

இதற்கிடையில், பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கிரீஸில் உள்ளார்.

  பன்முகத் திறமை கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சர்வதேச ஆடியோ படமான 'Sandman: Act lll'-ல் இடம்பெற்றிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து மற்றொரு சர்வதேச திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதி ஹாசன். டாப்னே ஷ்மோன் இயக்கும் 'தி ஐ' என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் இடம் பெறவிருக்கிறார்.

  இப்படத்தில் 'தி லாஸ்ட் கிங்டம்' புகழ் மார்க் ரோலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இம்மாத இறுதியில் ஏதென்ஸ் மற்றும் கோர்புவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ’தி ஐ’ படத்தில் இடம்பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார் ஸ்ருதி ஹாசன்.

  டார்க் உளவியல் களத்தில் 1980-ஆம் ஆண்டு நடக்கும் த்ரில்லர் படமாக இப்படம் இயக்கப்படவிருக்கிறது. இப்படம் ஒரு இளம் விதவை தன் கணவன் இறந்த தீவுக்குச் சென்று அவனது சாம்பலைப் பரப்புவதை மையமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

  எனெர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தந்தார்... விஜய்யுடனான சந்திப்பு குறித்து மனோபாலா பெருமிதம்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையில், பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தவிர, நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 'என்பிகே 107' படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' படத்திலும் பிஸியாக இருக்கிறார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress shruti Haasan