Home /News /entertainment /

Shruti Haasan: 61 வயது ஹீரோவுக்கு ஜோடியா? சிக்கலில் ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan: 61 வயது ஹீரோவுக்கு ஜோடியா? சிக்கலில் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

தமிழில் ஸ்ருதிக்கு எப்படி எதிர்மறை ராசியோ அதற்கு நேர் எதிர் ராசி தெலுங்கில்.

    ஜுன் 10 ஆம் தேதி வந்தால் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு 61 வது பிறந்தநாள். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த வருடம் கரோனாவுக்கு அடுத்து ஸ்ருதி சந்திக்கும் இக்கட்டு இந்த வாய்ப்பு.

    தெலுங்கு சினிமாவை ஐந்து பெரும் குடும்பங்கள் ஆள்கின்றன. அதில் முக்கியமான குடும்பம் மறைந்த என்டிஆரினுடையது. அவரது மகன் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்டிஆர் அவர்களது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்று பரந்து விரிந்து தெலுங்கு சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அதிலும், பாலகிருஷ்ணாவை பகைத்துக் கொண்டு யாரும் தெலுங்கில் கால் வைக்க இயலாது.

    வயது 61 என்றாலும், இளம் நடிகைகளுடனே அவர் ஜோடி போடுவார். அப்படி த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, அஞ்சலி எல்லாம் அவருடன் பல வருடங்கள் முன்பே நடித்திருக்கிறார்கள். 2011-ல் பாலகிருஷ்ணாவுடன் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடித்தார். பாலையா ராமன், நயன்தாரா சீதை. அதன் பிறகு நயன்தாரா தெலுங்குப் பக்கம் செல்லவில்லை. ஒரேயொரு நாயகி மையப் படத்தோடு ஜுட் விட்டவர் தான். த்ரிஷாவின் மார்க்கெட்டை இறக்கியதும் பாலையா தான்.

    இந்நிலையில் அவரின் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள். தமிழில் ஸ்ருதிக்கு எப்படி எதிர்மறை ராசியோ அதற்கு நேர் எதிர் ராசி தெலுங்கில். அவர் நடித்தால் படம் ஹிட். பவன் கல்யாணின் கட்டமராயுடு மட்டும் விதிவிலக்கு. இப்படி ராசியான நடிகையாக வலம் வரும் அவரை பாலையாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார்கள். பலரது கரியரை அஸ்தமித்த அவருடன் ஜோடி சேர்ந்தால், தெலுங்கின் ராசியான நடிகை பட்டத்தை இழக்க நேரிடும். ஜோடி சேராவிட்டால் பாலையாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

    ஸ்ருதியை இந்த இக்கட்டில் மாட்டி விட்டவர் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி. ரவி தேஜாவுடன் ஸ்ருதி நடித்த பலுபு, கிராக் படங்களை இயக்கியவர். இரண்டு படங்களுமே ஹிட். அந்த ராசியில் ஸ்ருதியின் தலையில் கைவைத்திருக்கிறார் மாலினேனி. ஏற்பதா மறுப்பதா? குழம்பிப் போயிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress shruti Haasan

    அடுத்த செய்தி