முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்!

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் - சிரஞ்சீவி

ஸ்ருதி ஹாசன் - சிரஞ்சீவி

சிரஞ்சீவி தற்போது மலையாள படமான லூசிபரின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதரில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படம் முடிவடைந்துள்ளது. நயன்தாராவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

  • Last Updated :

நடிகை ஸ்ருதிஹாசன் பாலகிருஷ்ணாவை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தத் தகவலை சிரஞ்சீவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சூர்யா, அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த ஸ்ருதிஹாசன் இப்போது சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சென்ற வருட ஆரம்பத்தில் ரவிதேஜா ஜோடியாக அவர் நடித்த திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து தெலுங்கின் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து சிரஞ்சீவியின் 154வது திரைப்படத்தில் அவரது ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தத் தகவலை நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு சிரஞ்சீவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

குக் வித் கோமாளி புகழை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

சிரஞ்சீவி தற்போது மலையாள படமான லூசிபரின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதரில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படம் முடிவடைந்துள்ளது. நயன்தாராவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். காட்ஃபாதரை தொடர்ந்து வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை பாபி என்பவர் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில்தான் ஸ்ருதிஹாசன் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து சலார் திரைப்படம் வெளியாகிறது. பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கும் நடித்திருக்கும் இந்தப் படத்தை கேஜிஎஃப் இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இவை தவிர சில இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடரிலும் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actress shruti Haasan