ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனநலம் குறித்த வதந்திகளுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

மனநலம் குறித்த வதந்திகளுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

உங்களை நீங்களே சமாளிக்க முயற்சி செய்யுங்கள், முடியவில்லை எனில் ஒரு சிகிச்சையாளரிடம் பேசுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை ஸ்ருதி ஹாசன், மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவது மற்றும் அவற்றை சரி செய்வது எளிதான விவகாரம் அல்ல என தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்திருந்தார். சமீபத்தில், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள 'வால்டர் வீரய்யா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை. அது அவரது மனநல பிரச்னைகள் குறித்த பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. தனது உடல்நலம் குறித்த செய்திகளை சாடிய அவர், தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுதான் அவர் வால்டர் வீரய்யா விழாவில் கலந்துக் கொள்ளாததற்கு காரணமாம்.

ஸ்ருதிஹாசனுக்கு ‘மனநலப் பிரச்சினைகள்’ இருப்பதாக வெளியான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்த அவர், "நல்ல முயற்சி!! மேலும் நன்றி, நான் எனது வைரஸ் காய்ச்சலில் இருந்து நலமாக மீண்டு வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

“சரி இதோ விஷயம், இது போன்ற தவறான தகவல்கள் மற்றும் அதிகப்படியான நாடகமாக்கல் அல்லது இதுபோன்ற விஷயங்களை வளைந்து கொடுக்கும் விதத்தில் கையாள்வது, மனநலம் பற்றி பேச மக்களை பயப்பட வைக்கிறது…

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

நான் எப்போதும் ஒரு மனநல வழக்கறிஞராக இருப்பேன், எல்லா அம்சங்களிலும் என்னைக் கவனித்துக்கொள்வதை எப்போதும் ஊக்குவிப்பேன். எனக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. உங்களின் முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களை நீங்களே சமாளிக்க முயற்சி செய்யுங்கள், முடியவில்லை எனில் ஒரு சிகிச்சையாளரிடம் பேசுங்கள்” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress shruti Haasan, Tamil Cinema