Shruti Haasan: 'என் பெற்றோர் பிரிந்ததில் மகிழ்ச்சி’ - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசன் பல ஆண்டுகளாக நடிகை சரிகாவை காதலித்து 1980-களில் அவரை மணந்தார்.

  • Share this:
    தனது பெற்றோர் கமல் ஹாசன் மற்றும் சரிகா பிரிந்தது மகிழ்ச்சி என நடிகை ஷ்ருதி ஹாசன் சமீபத்திய நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

    மூத்த நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், ஜூம் டிஜிட்டலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது பெற்றோரின் பிரிவினை பற்றியும், அது அவருக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசினார்.

    "அவர்கள் பிரிந்து போனதில் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஒத்து வராத இரண்டு நபர்கள், சில காரணங்களால் பழக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை," என்று ஸ்ருதி ஜூம் டிஜிட்டலிடம் கூறினார். மேலும் அவர்கள் "தொடர்ந்து அற்புதமான பெற்றோர்களாக இருக்கிறார்கள்" என்றும் கூறினார். நேர்காணலின் போது, நடிகை தனது அப்பாவுடன் "நெருக்கமாக" இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். "என் அம்மா நன்றாக இருக்கிறார், அவர்கள் இருவரும் தனித்துவமான அற்புதமான மற்றும் அழகான மனிதர்கள்" என்றும் குறிப்பிட்டார்.

    கமல்ஹாசன் பல ஆண்டுகளாக நடிகை சரிகாவை காதலித்து 1980-களில் அவரை மணந்தார். முன்பு நடனக் கலைஞர் வாணி கணபதியை சுமார் பத்து வருடங்கள் திருமணம் செய்திருந்த அவர், 1988-ல் வாணியிடமிருந்து விவாகரத்து பெற்றார். கமல்ஹாசன் சரிகா தம்பதிக்கு 1986-ஆம் ஆண்டில் முதல் குழந்தையாக ஸ்ருதிஹாசன் பிறந்தார். இரண்டாவது குழந்தையாக, 1991-ல் அக்‌ஷரா பிறந்தார். இவர் ஷமிதாப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

    ஸ்ருதிஹாசன் பல தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இம்ரான் கானுடன் இணைந்து 2009-ஆம் ஆண்டு வெளியான லக் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். வெல்கம் பேக், ராமையா வாஸ்தவையா, தில் தோ பச்சா ஹை ஜி மற்றும் டி-டே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சலார் என்ற படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: