ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா ஆகியோர் சமூக வலைதளங்களில் அதிகம் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவர். ஒவ்வொரு முறையும் சாந்தனுவுடனான செல்ஃபி அல்லது வீடியோவை வெளியிடும் போதும், அது சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்த ஜோடி காதலில் விழுந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் சாந்தனு ஹசாரிகாவை காதலித்த பிறகு ஒரு நபராக தனக்குள் ஏற்பட்ட மாற்றம் குறித்து சமீபத்திய நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார் ஸ்ருதி.
சமீபத்தில் தனது ஹாலிவுட் படமான தி ஐ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிரீஸிலிருந்து திரும்பிய ஷ்ருதி, தனது காதலனுடன் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்தார். ”நானும் சாந்தனுவும் சிறந்த நண்பர்கள், சில சமயங்களில், பின் தொடர்பாளர்கள் ஃபன்னாக கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்பதால், நாங்கள் கமெண்ட் செக்ஷனை படிப்போம். சாந்தனுவால் நான் அமைதியான மற்றும் கனிவான நபராக மாறியதாக உணர்கிறேன். அந்த குணங்களை நான் அவரிடமிருந்து பின்பற்ற முயற்சிக்கிறேன், அவர் மிகவும் கனிவானவர், அமைதியானவர் மற்றும் சிந்தனையுள்ளவர். எனவே, நான் மிகவும் ரசிக்கும் குணங்கள் சாந்தனுவிடம் உள்ளதால், நானும் அப்படி இருக்க கற்றுக்கொள்கிறேன்” என்றார்.
உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!
அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளியானது. நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா ஆகிய இரண்டு படங்களிலும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் ஜனவரியில் வெளியாகின்றன. இது தவிர, பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸின் சாலார் படமும் அவரின் கைவசம் உள்ளது. இதற்கிடையில், தனது ஹாலிவுட் படமான தி ஐ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress shruti Haasan