Home /News /entertainment /

Shruti Haasan: சென்னையில் காதலருடன் ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் படங்கள்!

Shruti Haasan: சென்னையில் காதலருடன் ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் படங்கள்!

ஸ்ருதி ஹாசன் - சாந்தனு ஹசாரிகா

ஸ்ருதி ஹாசன் - சாந்தனு ஹசாரிகா

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாந்தானுவைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

    நடிகை ஸ்ருதிஹாசன் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவருடன் இருக்கும் ரொமாண்டிக் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார் ஸ்ருதி.

    கடந்த ஜனவரி 28-ம் தேதி தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு முந்தைய நாள் அவர் இளைஞர் ஒருவருடன் உணவகத்திற்கு சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது. அதை பார்த்தவர்கள், ஸ்ருதி மீண்டும் காதலில் விழுந்து விட்டார் எனப் பேச துவங்கினர். இந்நிலையில் அந்த நபர் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகர் எனத் தெரிய வந்தது.

    இப்போது, ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாந்தானுவைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை சில்லிங் சீன்ஸ் என அதற்கு தலைப்பிட்டுள்ளார். இதனால ஸ்ருதியை சந்திக்க சந்தானு சென்னைக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சமீபத்திய காலங்களில், ஸ்ருதிஹாசன் சந்தானு ஹசாரிகாவுடன் மும்பையில் பொதுவிடங்களுக்கு சென்று வந்ததும், அதைத் தொடர்ந்து சாந்தனு விமான நிலையத்திற்கு வந்து ஸ்ருதியை வழியனுப்பி வைத்த நிகழ்வுகளும் வழக்கமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress shruti Haasan

    அடுத்த செய்தி