Home /News /entertainment /

சாந்தனுவிடம் காதலை சொன்னது நான் தான் - வீடியோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

சாந்தனுவிடம் காதலை சொன்னது நான் தான் - வீடியோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் - சாந்தனு ஹசாரிகா

ஸ்ருதி ஹாசன் - சாந்தனு ஹசாரிகா

ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் இன்ஸ்டாகிராமில் கப்பிள்ஸ் குவிஸ் வீடியோவை வெளியிட்டனர்.

    சாந்தனு ஹசாரிகாவிடம் தான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தியதாக நடிகை ஸ்ருதி ஹாசன், வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் இன்ஸ்டாகிராமில் கப்பிள்ஸ் குவிஸ் வீடியோவை வெளியிட்டனர். அதில் அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அந்த வீடியோவில், தங்கள் உறவில் ‘ஐ லவ் யூ’ என்று முதலில் சொன்னது தான் தான், என்பதை தெரிவித்தார் ஸ்ருதி. இருவரில் யார் சேஃப் என்ற கேள்விக்கு, ஸ்ருதியும் சாந்தனுவும் ஒருவரையொருவர் குறிப்பிட்டனர். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2021 ஜனவரியில் அவர்கள் தங்கள் காதலை அறிவித்தனர்.

    அடிக்கடி வெளியிடங்களுக்கு செல்வது, கலைக் கண்காட்சிக்கு போவது என உறவை இன்னும் பலப்படுத்தி வருகிறார்கள் ஸ்ருதி சாந்தனு ஜோடி. தற்போது இவர்கள் ஆப்பில் ஜோடிகளுக்கான குவிஸை நடத்தினர். யார் முதலில் இண்ட்ரெஸ்ட் காட்டியது என்பது தான் முதல் கேள்வி.



     




    View this post on Instagram





     

    A post shared by Shruti Haasan (@shrutzhaasan)






     

    மேலும் படிக்க - ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    அதற்கு, ஸ்ருதி, சந்தனுவை சுட்டிக் காட்ட, அவரோ அதற்கு எதிராக ஸ்ருதியை கை காட்டினார். ஐ லவ் யூ முதலில் சொன்னது யார் என்று கேட்டதற்கு, ஸ்ருதி தன்னையே குறிப்பிட்டார். இதனை சாந்தனுவும் சம்மதித்தார். 'யார் அதிக பாதுகாப்பானவர்' என்ற கேள்விக்கு ஒருவரையொருவர் சுட்டிக்காட்டினர் ஸ்ருதியும், சாந்தனுவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress shruti Haasan

    அடுத்த செய்தி