Home /News /entertainment /

61 வயது நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்!

61 வயது நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

தெலுங்கு சினிமாவில் இவரை பகைத்துக் கொண்டு யாரும் நடித்துவிட முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அறுபது வயதை கடந்த நடிகர்கள் முப்பது வயது கடந்த நடிகைகளுடன் ஜோடி சேர்வது இந்திய சினிமாவில் சாதாரணம். இருபது வயது நடிகைகளை விட்டு வைக்கிறார்களே என்று ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். 35 வயதான ஸ்ருதிஹாசன், 61 வயது நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

    தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரையுலகை ஆளும் ஐந்து அதிகாரமிக்க குடும்பங்களில் பாலகிருஷ்ணாவின் குடும்பம் முதன்மையானது. என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணாவின் அதிகார அதிரடிகள் பிரபலமானவை. படப்பிடிப்பில் தனது பணியாளர்களை அடிப்பதும், பொதுவெளியில் ரசிகர்களை உதைப்பதும் இவரது பொழுதுப்போக்கு. ரஹ்மானை யார் என்றே தெரியாது என்றவர்.

    பாலகிருஷ்ணாவை குறித்து இவ்வளவு புகழ காரணமிருக்கிறது. தெலுங்கு சினிமாவில் இவரை பகைத்துக் கொண்டு யாரும் நடித்துவிட முடியாது. இவர் ஒரு நடிகையை தேர்வு செய்தால் அவர் மறுக்காமல் நடித்துவிட வேண்டும். இல்லையேல் சிக்கல்தான். இவர் நடிப்பில் அகண்டா என்ற படம் தயாராகியுள்ளது. அதன் புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

    இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனை நாயகியாக நடிக்க கேட்டிருந்தனர். கோபிசந்த் மாலினேனியின் முந்தையப் படமான க்ராக்கில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். அதனால், பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என எதிர்பார்த்தனர். முதலில் தேதி இல்லை என்று சொன்ன ஸ்ருதி இப்போது நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். முன்னமே சொன்னோமே, பாலகிருஷ்ணா விருப்பத்தை மீறி தெலுங்கு சினிமாவில் யாரும் தாக்குப் பிடிக்க முடியாது என்று.

    ஸ்ருதி - பாலகிருஷ்ணா ஜோடியாக நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress shruti Haasan

    அடுத்த செய்தி