திரை நட்சத்திரங்கள் பொழுதுபோக்கிற்காக மாலத்தீவுக்கு சென்று, புகைப்படங்களை வெளியிட்டு வருவதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அச்சம் தனக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நேரத்தில் பிரபலங்கள் பலரும் மாலத்தீவு உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களில் முக கவசம் அணியாமல் உல்லாசமாகவும், நீச்சல் குளங்களில் குளித்துக்கொண்டும் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வருத்தம் தருவதாக ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் மற்றும் சின்னத்திரை நடிகை ஷிவானி நாரயணன் ஆகியோர் மாலத்தீவுக்கு சென்று அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுருந்தனர்.
தவிர, சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதோடு பாலிவுட் நடிகைகள், சாரா அலிகானும், ஜான்வி கபூரும் அடிக்கடி ட்ரிப் சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், பிரபாஸுடன் இணைந்து சலார் என்ற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.