Shruti Haasan: பிரபாஸின் 'சலார்' திரைப்படத்தில் அரசியல் நிருபராக ஸ்ருதிஹாசன்!
Shruti Haasan: பிரபாஸின் 'சலார்' திரைப்படத்தில் அரசியல் நிருபராக ஸ்ருதிஹாசன்!
ஸ்ருதி ஹாசன்
பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது.

தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது.
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில் அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. ஸ்ருதி இதே வேடத்தை இதற்கு முன் சிங்கம் 3 படத்தில் செய்திருந்தார். அது ஹரியின் கரம்மசாலா ஸ்டைலில் அமைந்து பரவலான கவனிப்பை பெறாமல் போனது. சல்லாரில் அந்த தவறு நிகழாது என நம்புவோம்.
சென்ற வருட இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இருப்பதால் சல்லாரின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை 2022, ஏப்ரல் 14 வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.