ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்ருதிஹாசனின் முதல் வெப் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஸ்ருதிஹாசனின் முதல் வெப் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசனுடன் மிதுன் சக்கரவபர்த்தி, அர்ஜுன் பஜ்வா, சத்யஜித் துபே, சோனாலி குல்கர்னி ஆகியோரும் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

 நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ள முதல் வெப் தொடர் பெஸ்ட்செல்லர்.

இந்தியில் தயாராகி இருக்கும் இந்தத் தொடரின் வெளியீட்டு தேதியை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது. திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் நடித்து வருகிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!

அவர் நடித்துள்ள முதல் வெப் தொடர் பெஸ்ட்செல்லர். இந்தியில் தயாராகி இருக்கும் இந்த வெப் தொடர் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி உள்ளது. ரவி சுப்பிரமணியன் இதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இந்த தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை சித்தார்த் மல்கோத்ரா தயாரித்துள்ளார். முகுல் அபயங்கர் தொடரை இயக்கி உள்ளார்.ஸ்ருதிஹாசனுடன் மிதுன் சக்கரவபர்த்தி, அர்ஜுன் பஜ்வா, சத்யஜித் துபே, சோனாலி குல்கர்னி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க.. அம்மாவையும் என்னையும் ஏன் இப்படி பேசுறீங்க? வேதனையில் அர்ச்சனா மகள் சாரா போட்ட போஸ்ட்!

இந்த மாதம் 18ஆம் தேதி தொடரை வெளியிடுவதாக அமேசான் பிரைம் வீடியோ சுருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளது.

இந்த வெப் தொடர் தவிர பிரபாஸின் சலார் திரைப்படத்தில் சுருதிஹாசன் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா படத்தில் அடுத்து நடிக்க உள்ளார். இவை தவிர மேலும் சில இந்திப் படங்களிலும் அவர் நடிக்கயிருக்கிறார்.  யூகிக்க முடியாத திருப்பங்களை கொண்ட அனைவரும் விரும்பும் வெப் தொடராக பெஸ்ட்செல்லர் இருக்கும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kollywood, OTT Release, Shruthihassan