நடிகை ஸ்ருதி தனது டாட்டூவை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் டாப்லெஸ் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முதிர்ச்சியான நடிப்பு மற்றும் செதுக்கப்பட்ட உடல்வாகிற்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அவர் பச்சை குத்திக் கொள்வதை விரும்புவார் என நம்மில் பலருக்கும் தெரியும். அவரது உடல் முழுவதும் ஐந்து இடங்களுக்கு மேல் மை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனது சமீபத்திய பதிவில், ஸ்ருதி ஹாசன் தனது முதுகில் கேமராவை எதிர்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஷ்ருதி ஹாசனின் முதுகில் ‘ஷ்ருதி’ என எழுதப்பட்டுள்ளது. அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர், "என் பெயரைச் சொல்லுங்கள்-சத்தமாகச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கமெண்ட் பகுதியை தங்களது அன்பால் நிரப்பி வருகிறார்கள்.
சமீபமாக
பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களால் தனது இன்ஸ்டாகிராமை நிரப்பி வரும் ஷ்ருதி, சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் இணைந்து
உடற்பயிற்சி செய்த வீடியோ மூலம் வைரலானார். இவர் நடித்த லாபம் திரைப்படம் வெளியான நிலையில், பிரபாஸுடன்
ஷ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சலார் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.