முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Shriya Saran : தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா - வீடியோ

Shriya Saran : தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா - வீடியோ

ஸ்ரேயா

ஸ்ரேயா

Shriya Saran Playing With Her Baby : நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • Last Updated :

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம் என அனைவருடனும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டை சேர்ந்த

ஆண்டராய் கோசீவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.குழந்தைக்கு ‘ராதா’ என்ற பெயரை வைத்துள்ளார்.

குழந்தை பிறந்த பின்பும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’படத்தில் நடித்துள்ளார்.மேலும் தமிழில் நரகாசூரன் படத்திலும், ஹிந்தியில் தட்கா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.தட்கா திரைப்படமானது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற SaltN'Pepper படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் நடிகை டாப்ஸி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரகாஷ் ராஜ் இயக்கிவுள்ளார்.

நடிகை ஸ்ரேயாவிற்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.  தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா, இருவரும் எடுத்துக்கொள்ளும் வீடியோவை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

also read : மீண்டும் ‘96’ ஜானு தோற்றத்தில் த்ரிஷா- வைரல் புகைப்படம்
 
 

 

 


View this post on Instagram


 

 

 

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)அந்த வகையில் நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் , ’இந்த வீடியோவை எடுத்ததற்கு நன்றி’ எனக்கூறி

ஆண்டராய் கோசீவை டேக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

First published:

Tags: Actress Shriya