ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சரத்குமார்

‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’ என்னும் நிகழ்ச்சியில் சரத்குமார் பங்கேற்க உள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சரத்குமார்
சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 7:52 PM IST
  • Share this:
உங்கள் மனதை வெல்ல முடிந்தால், நீங்கள் உலகத்தை வெல்ல முடியும்’ என்னும் தனது கற்றலை குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சரத்குமார் உடன்  ’சிந்தனைகள் சிம்ப்ளிபைடு' நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

ஆன்மீகம் பற்றிய இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கத் தயாராக உள்ளது. இந்நிகழ்ச்சியில் சரத்குமாருடன், குருதேவ் தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

உள்ளார்ந்த ஆன்மீகத்திற்கான பயிற்சி


உள்ளார்ந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் தேடும் எவருக்கும், இந்த நிகழ்ச்சி ஒரு தங்கச் சுரங்கம் போல இருக்கும் என்று நிகழ்ச்சிக்குழு உறுதியளிக்கிறது. ஏனெனில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சரத்குமாரிடம் உள்ளம் சார்ந்த ஆன்மீகத்தைப் பற்றிய ஒரு உரையாடலில் ஈடுபடவிருக்கிறார்.

கடவுள் மீது நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இல்லாதது பற்றிய சரத்குமாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அனைவருக்கும் ஆன்மீகத்தின் நோக்கத்தை அழகாக எடுத்துரைக்க உள்ளார். கடவுளை நம்பாத தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் நம்பிக்கை பற்றிய தனது அனுபவங்களை சரத்குமார் பகிர்ந்துகொள்ள உள்ளார். மேலும் வழிபாட்டு தலங்கள் பற்றியும் நேர்மறையான எண்ணங்கள் பற்றியும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

ஆத்மா பயணம் சாத்தியமா உரையாடல் ஆன்மீக தொடர்பாக சென்று கொண்டிருக்கும்போது, சரத்குமார் சர்ச்சைக்குரிய அஸ்ட்ரல் டிராவல் என்னும் ஆத்மா பயணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் பற்றி பேசுகிறார். குருதேவ் அஸ்ட்ரல் டிராவலின் பின்னால் உள்ள விஞ்ஞான ரீதியான பகுத்தறிவையும், நம்முடைய ஆன்மா உண்மையில் பல்வேறு பரிமாணங்களில் எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.

உரையாடல் சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்துக் கூறுவதோடு, மனித வாழ்க்கைக்கு முக்கியமான அறிவு சார்ந்த விஷயங்களை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நகைச்சுவையோடு எடுத்துக் கூறுகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading