முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இசை பிரியர்களே ரெடியா? சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்ரேயா கோஷல்!

இசை பிரியர்களே ரெடியா? சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்ரேயா கோஷல்!

பாடகி ஸ்ரேயா கோஷல்

பாடகி ஸ்ரேயா கோஷல்

Shreya Ghoshal: சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகியான கோஷல் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி பாடகியாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா கோஷல். இவரின் குரலுக்கு அடிமையாகாதவர்களே இல்லை எனும் அளவுக்கு, அவ்வளவு இனிமையான குரலுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

ஏராளமான தமிழ் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா கோஷல். அதேபோல் தமிழை தாண்டி பல மொழிகளில் பின்னணி பாடல் பாடி வருகிறார்.  இவர் பாடிய ஏராளமான பாடல்கள் பெரும் வெற்றியடைந்து ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ளன. இதனால் ஸ்ரேயா கோஷலுக்கு என தனி ரசிகர்களும் உள்ளனர்.

ஸ்ரேயா கோஷல் இசைத்துறையில் இருபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவர் உலகம் முழுவதும் உள்ள தொடர் இசை கான்சர்ட்களை நடத்தி வருகிறார். பைரி பியாவுக்காக அவர் தனது முதல் தேசிய விருதை வென்றார்.

2000 ஆம் ஆண்டில், ஸ்ரேயா கோஷல் இசை ரியாலிட்டி ஷோவான ச ரி க மாவில் பங்கேற்றார், அந்த நிகழ்ச்சியின் போதுதான் அவர் திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் கவனிக்கப்பட்டார், அவர் தேவதாஸ் (2002) திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக தனது முதல் இசை பயணத்தை ஆரம்பித்தார்.

பின்னணி பாடகியாக கவனம் ஈர்த்த ஸ்ரேயா கோஷல், சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அந்த நிகழ்ச்சி டிசம்பர் 18ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)



இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.  சமீபமாக இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா,  அனிருத் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

Read More: சமந்தா நடித்துள்ள யசோதா.. ட்ரெய்லரை வெளியிடும் சூர்யா!

அவர்களை தொடர்ந்து தற்போது பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bollywood, Music, Singer