‘என் பேச்ச நானே கேட்கமாட்டேன்’... போக்கிரி வசனத்தை பேசிய ஷ்ரதா கபூர்

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ படம் இம்மாதம் 30-ம் தேதி திரைக்கு வருகிறது.

news18
Updated: August 17, 2019, 2:50 PM IST
‘என் பேச்ச நானே கேட்கமாட்டேன்’... போக்கிரி வசனத்தை பேசிய ஷ்ரதா கபூர்
விஜய் - ஷ்ரதா கபூர்
news18
Updated: August 17, 2019, 2:50 PM IST
போக்கிரி படத்தில் வரும் வசனத்தை பேசிய ஷ்ரதா கபூரின் வீடியோ வைரலாகி வருகிறது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரதா கபூர், அருண் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சாஹோ. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவும் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 23-ம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் இம்மாதம் 30-ம் தேதி திரைக்கு வருகிறது.

இசை வெளியிட்டு விழாவில் பேசிய அருண்விஜய், ‘ஷ்ரத்தா கபூர் ஆக்‌ஷன் காட்சிகளில் மிக பிரமாதமாக நடித்துள்ளார். டாம் ரைடர் படம் பார்த்தது போல் இருந்தது’ என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தனியார் இணையதளத்துக்கு பேட்டிகொடுத்த ஷ்ரத்தா கபூர், விஜய் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் விஜய் பேசும் ‘நா ஒருவாட்டி முடிவு பண்ணீட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்’ என்ற வசனத்தை பேசினார். அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்

Loading...
Also watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...