முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குறும்படத்திலிருந்து 10 காட்சிகளை திருடினாரா இயக்குநர் வினோத்? அஜித் படத்தில் புதிய சர்ச்சை

குறும்படத்திலிருந்து 10 காட்சிகளை திருடினாரா இயக்குநர் வினோத்? அஜித் படத்தில் புதிய சர்ச்சை

அஜித் குமார்

அஜித் குமார்

இதுதொடர்பாக பலமுறை முயற்சித்தும் ராஜேஷால் இயக்குநர் வினோத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி 3வது முறையாக இணைந்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்தின் இயக்குநர் சர்ச்சைக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் பரவிவருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனுடன் தற்போது வலிமை படக் காட்சிகள் திருடப்பட்டதாக புதிய சர்ச்சையும் சேர்ந்துள்ளது. ராஜேஷ் ராஜா என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது 'தங்க சங்கிலி' எனும் குறும்படத்திலிருந்து 10 காட்சிகள் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பலமுறை முயற்சித்தும் ராஜேஷால் இயக்குநர் வினோத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஷ் ராஜா புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 1 வருடத்துக்கு பிறகு ராஜேஷ் ராஜா புகார் அளித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

First published:

Tags: Actor Ajith, Thunivu, Valimai