#Exclusive | ’தளபதி 63’ படக்கதை திருட்டு நடந்தது இப்படித்தான் - குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி

“எனது நெருங்கிய நண்பர் வழியாகத் தான் இந்தக் கதையின் கரு அட்லீக்கு கிடைத்துள்ளது”

news18
Updated: April 15, 2019, 3:19 PM IST
#Exclusive | ’தளபதி 63’ படக்கதை திருட்டு நடந்தது இப்படித்தான் - குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி
விஜய்
news18
Updated: April 15, 2019, 3:19 PM IST
‘தளபதி 63’ பட கதை திருட்டு விவகாரத்தில் தன்னை அட்லீ தரப்பிலும், ஏ.ஜி.எஸ் தரப்பிலும் சமரசம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் கே.பி.செல்வா

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக பிரமாண்ட ஸ்டேடியம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேவேளையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார் குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா.

இதுகுறித்து கே.பி.செல்வாவிடம் நாம் பேசிய போது, ”நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இந்தக் கதையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கூறியிருந்தேன்.



ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக நான் முதன்முறையாக நீதிமன்றத்தை அணுகிய போது எழுத்தாளர்கள் சங்கத்தை அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Loading...
அதற்கு பிறகு அட்லீயின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார்கள். அப்போது இதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் இந்த பேச்சு என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ் குமார் தலைமையிலான கமிட்டி என்னை விசாரித்தது. இறுதியாக நான் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து 6 மாத காலம் கூட ஆகவில்லை.

சங்க விதிகளின்படி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான கடிதத்தையும் என்னிடம் வழங்கினார்கள்.

மீண்டும் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இதுதொடர்பான வழக்கு 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மேலும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



எனது நெருங்கிய நண்பர் வழியாகத் தான் இந்தக் கதையின் கரு அட்லீக்கு கிடைத்துள்ளது. நான் இந்தக் கதையை பெண்களை மையப்படுத்தி உருவாக்கியிருந்தேன். நயன்தாரா, கங்கணா ரணாவத் போன்ற பெரிய நடிகைகளை கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். நடிகை அதிதிபாலனிடம் கூட இந்தக் கதையை கூறியிருக்கிறேன்” என்றார்.

வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!






சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626