ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக குறும்பட நடிகை போலீசில் புகார்!

ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக குறும்பட நடிகை போலீசில் புகார்!
சித்தரிப்புப் படம்
  • News18
  • Last Updated: September 22, 2019, 6:41 PM IST
  • Share this:
ஆபாச படம் எடுத்து தன்னை மிரட்டுவதாக குறும்பட நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வருபவர் ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. வயது 25) இவர் நேற்று வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், புழல் பகுதியில் வசித்துவரும் பக்ருதீன் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


அதன் பேரில், போலீசார் பக்ருதீனிடம் விசாரணை நடத்திய போது, ஜான்சி குறும்படங்களில் நடிப்பவர் என்பதும், ஜான்சிக்கும் பக்ருதீனுக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் இருப்பதும், அப்போது, ஜான்சி பக்ரூதினிடம் ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை அவர் திருப்பி கேட்கவே கோபம் அடைந்த ஜான்சி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டியதாக பக்ருதீன் தெரிவித்தார்.

இதற்கிடையில், பக்ரூதின் புழல் காவல் நிலையத்தில் ஜான்சி மீது பண மோசடி செய்ததாக புகார் அளிக்கவே, பக்ருதீன் மீது வடபழனி காவல் நிலையத்தில் ஜான்சி பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, போலீசார் பக்ருதீன் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வீடியோ பார்க்க: சக்தே இந்தியாவின் காப்பியா பிகில்?

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்