வீல் சேரில் விஜய்? தளபதி 63 சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்

கேரவனில் இருந்து விஜய் இறங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீல் சேரில் விஜய்? தளபதி 63 சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்
தளபதி 63
  • News18
  • Last Updated: May 7, 2019, 8:18 PM IST
  • Share this:
நடிகர் விஜய் தளபதி 63 சூட்டிங் ஸ்பாட்டில் வீல் சேரில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் படக்குழுவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதே போல் கேரவனில் இருந்து விஜய் இறங்கி வரும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Also watch

First published: May 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்