Home /News /entertainment /

நாளை தொடங்கும் வெங்கட் பிரபு - நாக சைத்தன்யா படத்தின் படப்பிடிப்பு!

நாளை தொடங்கும் வெங்கட் பிரபு - நாக சைத்தன்யா படத்தின் படப்பிடிப்பு!

நாக சைத்தன்யா - வெங்கட் பிரபு

நாக சைத்தன்யா - வெங்கட் பிரபு

இது வெங்கட் பிரபுவின் 11-வது படம். அதோடு நாக சைத்தன்யாவின் 22-வது படமாக உருவாகவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்தப் படம் குறித்த அட்டகாச அப்டேட் வெளியாகியுள்ளது. 

    இயக்குநர் வெங்கட் பிரபு கடைசியாக மாநாடு படத்தை இயக்கியிருந்தார். சிம்பு ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகியது. இது வெங்கட் பிரபுவின் 11-வது படம். அதோடு நாக சைத்தன்யாவின் 22-வது படமாக உருவாகவிருக்கிறது.



    ஃபால் வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் அஞ்சலி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. அதாவது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Venkat Prabhu

    அடுத்த செய்தி