• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மம்முட்டி நடிப்பில் இந்தியாவின் முதல் ஐந்தாம் பாகம் திரைப்படம் ஆரம்பம்

மம்முட்டி நடிப்பில் இந்தியாவின் முதல் ஐந்தாம் பாகம் திரைப்படம் ஆரம்பம்

ஒரு சிபிஐ டைரி குறிப்பு

ஒரு சிபிஐ டைரி குறிப்பு

நவம்பர் 29 ஆம் தேதி இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். மம்முட்டி தனது பழைய வேடத்தை இதிலும் தொடர்கிறார். வழக்கம் போல் எஸ்.என்.சுவாமி கதை எழுத, கே.மது படத்தை இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மம்முட்டி நடிப்பில் ஒரு சிபிஐ டைரி குறிப்பு சீரிஸில் இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளன. ஐந்தாவது பாகத்தின் படப்பிடிப்பு நவம்பர் 29 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்திய சினிமாவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்பதே அரிது. சமீபமாகத்தான் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காஞ்சனா, அரண்மனை, இந்தியில் வெளிவரும் ஹவுஸ்புல் சீரிஸ்களைப் பார்த்தோம் என்றால், படத்தின் பெயர் ஒன்றாக இருக்குமே தவிர அதில் வரும் கதாபாத்திரங்களும், கதையும் படத்துக்குப் படம் மாறிக் கொண்டிருக்கும்.

ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு சீரிஸில் மம்முட்டி சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரியாகவே நான்கு பாகங்களிலும் வருவார். இவர் கீழ் பணியாற்றும் இரு அதிகாரிகள் உண்டு. அந்த வேடங்களில் முகேஷும், ஜெகதி ஸ்ரீகுமாரும் நடித்திருப்பார்கள். நான்கு பாகங்களிலும் இவர்கள் உண்டு. ஒவ்வொரு பாகத்திலும் ஒரு வழக்கை சேதுராம ஐயர் துப்பறிவார்.

இந்தியாவில் வெளியான சீரிஸ்களில் மிகவும் வெற்றிகரமான சீரிஸ் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. இதன் முதல் பாகம் ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு 1988 இல் வெளிவந்தது. இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989 ஆம் வருடமும், மூன்றாம் பாகம் சேதுராம ஐயர் சிபிஐ 2004 ஆம் வருடமும், நான்காவது பாகம் நேரறியான் சிபிஐ 2005 ஆம் வருடமும் வெளியானது. இந்த நான்கு பாகங்களிலும் மம்முட்டி சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அவர் கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக முகேஷும், ஜெகதி ஸ்ரீகுமாரும்.

நவம்பர் 29 ஆம் தேதி இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். மம்முட்டி தனது பழைய வேடத்தை இதிலும் தொடர்கிறார். வழக்கம் போல் எஸ்.என்.சுவாமி கதை எழுத, கே.மது படத்தை இயக்குகிறார். முந்தைய பாகங்களில் ஜெகதி ஸ்ரீகுமார் மாறுவேடங்களில் சென்று புலனாய்வு செய்யும் காட்சிகள் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும்.

Also read... 2022-ம் ஆண்டில் திரையில் கலக்கக் காத்திருக்கும் மாஸ் நடிகர்கள்

இந்தமுறை அவர் படத்தில் இல்லை. விபத்தில் அவயங்கள் செயலிழந்த நிலையில் அவர் இப்போது சக்கர நாற்காலியில் நடமாடுகிறார். பேசவும் இயலாது. இந்த ஐந்தாம் பாகத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, தில்லீஷ் போத்தன், சௌபின் ஷகீர், ஆஷா சரத் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்திய சினிமாவில் முதல் ஐந்தாம் பாகம் இது என்பது முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: