படப்பிடிப்புகள் ரத்து: ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை படங்களின் நிலையென்ன?

கிட்டத்தட்ட 2 வாரங்கள் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட தேதியில் இப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து: ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை படங்களின் நிலையென்ன?
அஜித், ரஜினி
  • Share this:
கொரோனா பாதிப்பால் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்திருப்பதால் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விக்ரமின் கோப்ரா போன்ற படங்களும் திட்டமிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ஆயுத பூஜை தினத்திலும் அஜித்தின் வலிமை தீபாவளி தினத்திலும் விக்ரமின் கோப்ரா கோடை விடுமுறையிலும் வெளியாகவிருந்தன. ஆனால், கிட்டத்தட்ட 2 வாரங்கள் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட தேதியில் இப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மேலும், கோடை விடுமுறையைக் குறிவைத்து அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அனுஷ்காவின் சைலன்ஸ், விஷ்ணு விஷாலின் காடன் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கோடை விடுமுறையில்தான் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகும். அதைக் குறிவைத்து இந்த ஆண்டு கோடை விடுமுறையில் பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட திட்டமிட்டப்பட்டிருந்தன. ஆனால், கொரோனா அச்சத்தால் இந்த கோடை விடுமுறை வர்த்தக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்