ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரமின் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது...!

விக்ரமின் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது...!

கோப்ரா

கோப்ரா

விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கடாரம் கொண்டான். 2019 இல் வெளியானது. இரண்டு வருடங்களாக விக்ரமின் எந்தப் படமும் வெளியாகவில்லை. ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். கௌதமின் துருவநட்சத்திரம், கார்த்திக் சுப்புராஜின் மகான், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் என கை நிறைய படங்கள் இருக்கிறது. எனினும் திரைக்கு வந்தால்தானே ரசிக்க முடியும்.

இந்தப் படங்களில் மகான், பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆகியவற்றின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பொன்னியின் செல்வன் 2022 கோடையில் வெளிவருகிறது. மகான் படம் அதிகமும் ஓடிடியில் வெளியாகவே வாய்ப்பு. துருவநட்சத்திரம் கௌதம் இயக்கம் என்பதால் அது வெளிவர இன்னும் நான்கைந்து வருடங்கள் பிடிக்கலாம். ஆக, விக்ரம் ரசிகர்கள் அனைத்தையும்விட ஆவலாக எதிர்பார்ப்பது கோப்ரா படத்தை.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். விக்ரமின் பேவரைட்டான ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இந்தப் படத்தில் உள்ளன. கதையும் யூனிவர்சல் ரகம் என்கிறது படக்குழு. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

அதனை முன்னிட்டு க்ரீன் மேட் ஸ்டுடியோவின் போட்டோவை வெளியிட்டுள்ளனர். க்ரீன் மேட்டில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள் என்றால் நிச்சயம் அது சிஜி இடம்பெறும் காட்சியாகவே இருக்கும். இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து அடுத்த வருடம் படம் திரைக்கு வரும்.

Also read... 2022-ம் ஆண்டில் திரையில் கலக்கக் காத்திருக்கும் மாஸ் நடிகர்கள்

கோப்ராவில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மலையாள நடிகர் மம்முக்கோயா ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் படத்தை தயாரித்துள்ளார்.

2015 இல் வெளியான ஐ, 2016 இல் வெளியான இருமுகன்  படங்களுக்குப் பிறகு விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கும் படம் இது. விக்ரம் ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதற்கான காரணம் இதுவே.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram