• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை! அன்புசெல்வன் ஃபர்ஸ்ட் லுக் குறித்து கௌதம் மேனன் ஷாக்

இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை! அன்புசெல்வன் ஃபர்ஸ்ட் லுக் குறித்து கௌதம் மேனன் ஷாக்

கௌதம் மேனன்

கௌதம் மேனன்

அன்புசெல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அன்புசெல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். கௌதம் மேனனம் நடிக்கும் அன்புசெல்வன் என ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வேகமாக வைரலாகியது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலர் கௌதம் மேனனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.



    இந்நிலையில் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த கௌதம் மேனன் இந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், எனக்கு இது அதிர்ச்சியான செய்தி. நான் நடிப்பதாக கூறப்படும் இந்த படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் இருக்கும் இயக்குநரை நான் சந்தித்ததும் இல்லை, யார் என்றும் தெரியாது.



    இந்த ஃபர்ஸ்ட்லுக் மூலம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்துள்ளது. இதுப்போன்ற செயலை மிக எளிதாக செய்வது எனக்கு அதிர்ச்சியாகவும் பயமுறுத்த கூடியதாகவும் உள்ளது“ என்றுள்ளார்.

    கௌதம் மேனனின் ட்வீட்டை தொடர்ந்து பா.ரஞ்சித் அந்த போஸ்டை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: