Udhayanidhi Stalin: உதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

  • Share this:
    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’ஆர்ட்டிக்கிள் 15’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ஷிவானியும் நடிக்கிறார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகிள் 15 ரீமேக் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு பிரமாண்ட வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

    Shivani plays an important role in Udhayanidhi Stalin Article 15 tamil remake
    ஷிவானி


    அவர் கைவசம் உள்ள படங்களில், ‘ஆர்ட்டிகிள் 15’ இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இதனை தமிழில் ரீமேக் செய்கிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்த நிலையில், ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: