ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வடிவேலு ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்த ஷிவானிக்கு அவருடனே நடிக்கும் வாய்ப்பு?

வடிவேலு ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்த ஷிவானிக்கு அவருடனே நடிக்கும் வாய்ப்பு?

ஷிவானி - வடிவேலு

ஷிவானி - வடிவேலு

'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் கமிட்டானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்தில் தனது டீனேஜ் வயதைக் கடந்தார். 20 வயதில் பொழுதுபோக்கு துறையில் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளார். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்களுக்கு பரிச்சயாமான முகமான ஷிவானி, சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வருகிறார்.

  2020-ல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி, அதன் மூலம் இன்னும் பெரிய உச்சத்தைத் தொட்டார். 98 நாட்கள் வீட்டில் தங்கியிருந்த அவர், சிங்க பெண் டாஸ்க்கில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சக போட்டியாளர் பாலாஜி முருகதாஸுடன் காதல் கிசு கிசுக்களிலும் சிக்கினார்.

  விவாகரத்து அறிவிப்பை திடீரென நீக்கிய சமந்தா - குழப்பத்தில் ரசிகர்கள்!

  'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் கமிட்டானார். கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தவிர விஜய் சேதுபதியின் 46வது படத்திலும், ஆர்.ஜே.பாலாஜியின் 'வீட்ல விசேஷம்' ஆகிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

  ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்!


  இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கம்பேக் திரைப்படமான நாய் சேகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ஷிவானி. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு ரெடின் கிங்ஸ்லி மற்றும் சிவாங்கி ஆகியோரும் முக்கிய நகைச்சுவை வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vadivelu, Tamil Cinema, Vadivelu