Home /News /entertainment /

அமெரிக்காவுக்கு யானை பரிசளித்த சிவாஜி கணேசன்

அமெரிக்காவுக்கு யானை பரிசளித்த சிவாஜி கணேசன்

அமெரிக்காவுக்கு யானை பரிசளித்த சிவாஜி கணேசன்

அமெரிக்காவுக்கு யானை பரிசளித்த சிவாஜி கணேசன்

ஜெயலலிதாவுக்கு முன்னாள் யானையை அன்பளிப்பாக அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

யானை அன்பளிப்பு என்றதும் தமிழக அரசியலில் முதலில் நினைவுக்கு வரும் பெயர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆன்மிகம், ஜோதிடம், பரிகாரம் ஆகியவற்றில் ஆழந்த நம்பிக்கை உள்ள அவர், தேர்தல் வெற்றிக்காக பல யானைகளை அன்பளிப்பாக கோவில்களுக்கு அளித்துள்ளார்.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு கண்ணன் என்ற யானையை ஜெயலலிதா பரிசளித்தபோது அது சர்ச்சையானது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு ஜெயலலிதா 2001 இல் கண்ணனை அன்பளிப்பாக தந்தார். பிறகு அந்த யானை கிருஷ்ணா என்று பெயர் மாற்றப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கும் அவர் பெண் யானை ஒன்றை அன்பளிப்பாக அளித்தார்.


ஜெயலலிதாவுக்கு முன்னாள் யானையை அன்பளிப்பாக அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1962 இல் நேரு பிரதமராக இருந்த போது இந்தியா சார்பில் கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்கா சென்றார். அப்போதுதான் நயாகரா நகரில் அவர் ஒரு நாள் மேயராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  அவர் நியூ மெக்சிகோவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு சென்ற போது, குழந்தைகள் பணம் சேர்த்து உயிரியல் பூங்காவுக்கு குருவிகள் வாங்க அளிப்பதை பார்த்தார். சிவாஜியும் அந்த உயிரியில் பூங்காவுக்கு யானை ஒன்றை பரிசளிப்பதாக வாக்களித்தார்.

Also Read : புஷ்பா திரைப்பட வசனத்தை 10ஆம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவன்

அதன்படி சென்னை திரும்பியதும், கமலா என்ற யானைக் குட்டியை அமெரிக்காவுக்கு பரிசளித்தார். கமலாவும் சமர்த்தாக அமெரிக்கா போய் சேர்ந்தது. இந்தியாவில் கோடையில் பழகிய கமலாவுக்கு அமெரிக்காவின் குளிர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் கம்பளிப் போர்த்தி கமலாவுக்கு ஸ்பெஷல் வசதிகள் செய்து கொடுத்தனர்.



 

சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானை பரிசளிப்பதற்கு முன்பே தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு 1960 இல் வெள்ளையம்மா என்ற பெண் யானையை அன்பளிப்பாக அளித்தார். அந்த யானை பல வருடங்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. 2013 செப்டம்பர் மாதம் தனது 63 வது வயதில் வெள்ளையம்மா நோயினால் இறந்துபோனது.

ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னாள் யானையை அன்பளிப்பாக தந்த ஒருவர் இருக்கிறார். அவர் ஜவஹர்லால் நேரு. 1949 ஆம் ஆண்டு இந்தியா - ஜப்பான் நட்புறவின் அடையாளமாக தனது மகள் இந்திராவின் பெயரில் ஒரு யானைக்குட்டியை நேரு ஜப்பானுக்கு பரிசளித்தார். ஜப்பானின் குழந்தைகளுக்காக இந்த பரிசை அளிப்பதாக அவர் தெரிவித்தார். டோக்கியோவில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த யானை வளர்க்கப்பட்டது.



இந்திய சினிமாவில் யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களின் வரலாற்றை ஒரு புத்தகமாகப் போடலாம். அதேபோல் இந்திய திரைபிரபலங்களின் யானையுடனான உறவைப் பற்றியும் ஒரு புத்தகம் போடலாம். முக்கியமாக சொந்தமாக வீட்டில் யானை வளர்க்கும் ஜெயராமின் யானை பற்று குறித்து ஒரு சினிமாவே எடுக்கலாம். நடிப்பு முதல் யானைவரை எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சிவாஜியின் பெயர் இடம்பிடிப்பது இன்னொரு ஆச்சரியம்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி