ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இணையும் சிவராஜ்குமார்

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இணையும் சிவராஜ்குமார்

தனுஷ் - சிவராஜ்குமார்

தனுஷ் - சிவராஜ்குமார்

தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ 1940-களின் பின்னணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினைப் பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

  ‘நானே வருவேன்’ படத்தில் நடித்த தனுஷ் ‘வாத்தி’யின் ரிலீஸுக்கு தயாராகி வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படம், டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘வாத்தி’ படத்தைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் தனுஷ். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது.

  படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும், அதில் தனுஷுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துக் கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2023-க்குள் முடிவடையும் என்றும், பின்னர் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு செல்லும் என்றும் தெரிகிறது.

  பீரியட்ஸ் கறையோட 2 கி.மீ நடந்து போனேன் - அனிதா சம்பத் உருக்கம்!

  தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ 1940-களின் பின்னணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினைப் பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதோடு கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Dhanush