ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியின் ஜெயிலரை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லரில் முக்கிய நடிகர்!

ரஜினியின் ஜெயிலரை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லரில் முக்கிய நடிகர்!

தனுஷ் - ரஜினிகாந்த்

தனுஷ் - ரஜினிகாந்த்

சிவ ராஜ்குமார் தமிழில் வரிசையாக படங்கள் மூலம் தனது இருப்பை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்கும் சிவராஜ்குமார், அடுத்ததாக தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  நடிகர் சிவ ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு அங்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கன்னடத்தில் பல தசாப்தங்களாக வெற்றிப்படங்களை வழங்கிய அவர் கோலிவுட்டின் பக்கம் திரும்பியுள்ளார். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். தற்போது, 'ஜெயிலர்' படத்திற்கு பிறகு சிவராஜ்குமார், தனுஷுடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

  'கேப்டன் மில்லர்' படத்திற்காக இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய ஷெட்யூலுக்காக தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் படக்குழு முகாமிட்டுள்ளது. 'கேப்டன் மில்லர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சிவ ராஜ்குமாரை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

  சிவ ராஜ்குமார் தமிழில் வரிசையாக படங்கள் மூலம் தனது இருப்பை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் அவர் அதிக தமிழ் படங்களில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'கேப்டன் மில்லர்' 1980-களில் நடக்கும் ஆக்‌ஷன் கதை என்றும், இதில் தனுஷ் பல தோற்றங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Shiva Rajkumar to act with Dhanush Captain Miller after Rajinikanth Jailer, shiva rajkumar age, shiva rajkumar brothers, shiva rajkumar son, shivarajkumar recent movies, shiva rajkumar twitter, shiva rajkumar imdb, jailer meaning, jailer wiki, jailer tamil, jailer nelson, jailer update, jailer tamil movie, jailer movie, captain miller film, dhanush captain miller, captain miller 2022, captain miller india, captain miller story, captain miller trailer, captain miller heroine, சிவ ராஜ்குமார், ரஜினிகாந்த் சிவ ராஜ்குமார், தனுஷ் சிவ ராஜ்குமார், ஜெயிலர் ரஜினிகாந்த், கேப்டன் மில்லர் தனுஷ்

  பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை இவர் தான்!

  'கேப்டன் மில்லர்' படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற உள்ள நிலையில், பெரும்பகுதி தென்காசி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட உள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Rajinikanth