த்ரிஷாவை கைது செய்யுங்கள் - சிவ பக்தர்கள் ஆவேசம்

த்ரிஷா

முன்னதாக பொன்னியிண் செல்வன் படப்பிடிப்பில் ஒரு குதிரை இறந்ததற்காக படத்தின் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு தொடுத்தனர்.

 • Share this:
  கோயிலில் செருப்பு அணிந்திருந்ததற்காக த்ரிஷாவை கைது செய்யும்படி ஒரு சிவ பக்தர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

  பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தூரில் உள்ள பழமையான சிவன் கோவிலில் இதன் படப்பிடிப்பு நடந்த போது, த்ரிஷா செருப்பணிந்து கோவிலில் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. கோயிலில் செருப்பணிந்து சென்று, அதன் புனிதத்தை த்ரிஷா கெடுத்துவிட்டார் என ஒரு சிவபக்தர்கள் அவர்மீது போலீசில் புகார் தந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஒரு குதிரை இறந்ததற்காக படத்தின் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு தொடுத்தனர். அந்த சர்ச்சை அடங்குவதற்குள் த்ரிஷாவை முன் வைத்து இன்னொரு  பிரச்சனை. இப்படி தொடர்ச்சியாக பிரச்சனைகள் வந்தால் அந்தப் படம் வெற்றி பெறும் என்பது, கோடம்பாக்கத்தின் ஆண்டாண்டுகால நம்பிக்கை. பொன்னியின் செல்வனுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள். படம் பம்பர் ஹிட்டானாலும் ஆச்சரியமில்லை.

  Trisha, trisha krishnan, trisha krishnan instagram, trisha krishnan age, trisha krishnan number, uma krishnan, trisha krishnan marriage, trisha krishnan - imdb, trisha krishnan age husband name, trisha krishnan facebook, trisha krishnan ponniyin selvan, ponniyin selvan trisha, த்ரிஷா, த்ரிஷா கிருஷ்ணன், த்ரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம், த்ரிஷா கிருஷ்ணன் வயது, த்ரிஷா கிருஷ்ணன் எண், உமா கிருஷ்ணன், த்ரிஷா கிருஷ்ணன் திருமணம்
  கோயிலில் த்ரிஷா


  பொன்னியின் செல்வனின் வசனக்காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், அடுத்ததாக பாடல் காட்சி ஒன்றை மணிரத்னம் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் த்ரிஷாவை முன்வைத்து இப்படியொரு சிக்கல். படத்தின் திரைக்கதையாசிரியர் ஜெயமோகனிடம் கேட்டால், கோயிலில் செருப்பணிவது ஆகம குற்றமா இல்லையா என்று 300 பக்கங்களுக்கு சின்ன குறிப்பு எழுதித் தருவார். வீண் புகார் தருகிறவர்களுக்கு அது சாட்டையடியாக இருக்கும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: