முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்ஃபி எடுக்க மறுத்த பிரபல பாடகரை தாக்கிய எம்.எல்.ஏ-வின் மகன் - வைரலாகும் வீடியோ

செல்ஃபி எடுக்க மறுத்த பிரபல பாடகரை தாக்கிய எம்.எல்.ஏ-வின் மகன் - வைரலாகும் வீடியோ

சோனு நிகாம்

சோனு நிகாம்

கடந்த ஆண்டு சோனு நிகாமுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் பாதர்பேகரின் மகன் மற்றும் மருமகன் தாக்கியதில் பாடகர் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனு தற்போது நலமுடன் இருக்கிறார். ஆனால் அவரது குரு, குலாம் முஸ்தபா கானின் மகன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் ரப்பானி கான் மற்றும் பாதுகாவலருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் வட்டாரங்களின்படி, அரசியல்வாதியின் மகனும் மருமகனும் சோனுவுடன் கட்டாய செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். இதனால் அவர்களுக்கும் பாடகரின் பாதுகாவலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அந்த சண்டையில் சோனு நிகாம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் காயமடைந்தனர். நான்கு நாட்கள் நடந்த திருவிழா ஒன்றின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்றார் சோனு நிகாம். கலாச்சார நிகழ்வான இதில், கடந்த காலங்களில் சில பிரபலமான பாடகர்கள் கலந்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு சோனு நிகாமுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட பலமொழிகளில் பாடியுள்ளார். ஜீன்ஸ் படத்தி்ல் வாராயோ தோழி என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமான சோனு நிகாம், கிரீடம் படத்தில் விழியில் உன் விழியில், மதராசப்பட்டினம் படத்தில் ஆறுயிரே, சகுனி படத்தில் மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: