பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் வில்லனின் முகம் மாஸ்க் அணிந்து காட்டப்பட்டிருந்தது. அந்த வில்லன் நடிகர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முதல் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை யூடிபில் பெற்று பீஸ்ட் ட்ரெய்லர் சாதனை படைத்தது. தொடர்ந்து ரசிகர்கள் ட்ரைலரை பார்த்து வருகிறார்கள். தமிழ் மொழியில் மட்டும் வெளியான இந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை பெற்றது ஒரு சாதனையாகும். வலிமை படத்தின் ட்ரைலர் மூன்று மாதங்களில் 23 மில்லியன் பார்வைகளை மட்டுமே யூடியூபில் பெற்றுள்ள நிலையில், பீஸ்ட் ட்ரெய்லர் வெறும் 24 30 மில்லியன் பார்வைகளை பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பீஸ்ட் டிரைலரில் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சுனில் ரெட்டி போன்ற முக்கியமான நடிகர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்தனர். படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரமாக காட்டப்பட்ட நபர் மாஸ்க் அணிந்து இருந்தார். அதனால் அது யார் என்பதே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்துள்ளது.
4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

ஷைன் டாம் சாக்கோ
ஷைன் டாம் சாக்கோ சின்னச் சின்ன வேடங்களில் நடித்து மலையாளத்தில் கவனத்தை ஈர்த்தவர். பிறகு பிரதான வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பீஷ்மபர்வம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அவர் தான் பீஸ்ட் படத்தில் பிரதான வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக டிரைலரில் மாஸ்க் அணிந்தபடி வரும் வில்லன் அவர் தான் என்கிறார்கள்.
Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!
பீஸ்ட் படத்தில் விஜய் வீரராகவன் என்ற RAW ஏஜன்ட் ஆக நடித்துள்ளார். தீவிரவாதிகள் ஒரு 'மால்'லை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தீவிரவாதிகளை கொன்று எப்படி அங்கிருந்த பிணைக்கைதிகளை விஜய் காப்பாற்றுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதையாகும். ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் திரைக்கு வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.