Home /News /entertainment /

அது என் தவறு தான், சாரி நண்பன் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பீஸ்ட் வில்லன்!

அது என் தவறு தான், சாரி நண்பன் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பீஸ்ட் வில்லன்!

விஜய் - ஷைன் டாம் சாக்கோ

விஜய் - ஷைன் டாம் சாக்கோ

"யாரையோ அல்லது எதையோ பற்றி தவறாக பேசினால், அந்த நபரை அல்லது விஷயத்தை விரும்புவோருக்கு அது மிகவும் வலிக்கிறது"

    பீஸ்ட் படத்தை விமர்சித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

    பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்து தமிழில் அறிமுகமானார். இருப்பினும், படத்தில் ஷைன் டாம் சாக்கோவின் கதாபாத்திர நீளம் குறைவாக இருந்ததால் அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பீஸ்ட் படத்தை விமர்சிக்கவும் செய்திருந்தார்.

    முன்னதாக ஒரு பேட்டியில், 'பீஸ்ட்' படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டினார் சாக்கோ. தான் நடித்துள்ள படத்தையே குற்றம் சாட்டியதற்காக ஷைன் டாம் சாக்கோவை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்தனர். அதோடு அவரது பங்களிப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர். எனவே ஷைன் டாம் சாக்கோ தற்போது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

    காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

    "மீடியாவில் நான் அப்படி பேசியதற்கு வருந்துகிறேன். அது என் தவறுதான், சாரி நண்பன்" என இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். அதோடு, ”யாரையோ அல்லது எதையோ பற்றி தவறாக பேசினால், அந்த நபரை அல்லது விஷயத்தை விரும்புவோருக்கு அது மிகவும் வலிக்கிறது" என்றும் அவர் விளக்கியுள்ளார்.

    Shine Tom Chacko apologizes for his hatred comment on Thalapathy Vijay Beast, Shine Tom Chacko, Vijay Beast movie, thalapathy vijay,  thalapathy vijay beast movie, malayalam actor Shine Tom Chacko, Shine Tom Chacko movies, Shine Tom Chacko beast, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பீஸ்ட், பீஸ்ட் திரைப்படம்,  தளபதி விஜய் ரசிகர்கள், ஷைன் டாம் சாக்கோ, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ
    ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் கார்கி - உதயநிதி ஸ்டாலின்!

    படங்களைப் பொறுத்தவரை, ஷைன் டாம் சாக்கோ மலையாளத்தில் ஆறு படங்களுக்கு மேல் நடித்து வருவதால், தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கிறார். மம்முட்டியின் போலீஸ் படத்திலும் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி