ஆபாச பட புகாரில் கணவர் கைது; மெளனம் கலைத்த ஷில்பா ஷெட்டி!

ஆபாச பட புகாரில் கணவர் கைது; மெளனம் கலைத்த ஷில்பா ஷெட்டி!

நான் கடந்த காலங்களிலும் பல சோதனைகளை கடந்துவந்துள்ளேன். எதிர்காலங்களிலும் அதனை கடந்து வருவேன். என் வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவும் எனக்கு தடையாக இருக்காது என்று அவரின் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Share this:
  பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வெளியிட்ட குற்றத்திற்காக அண்மையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

  தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரர் ஆகவும் இருக்கிறார். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என புகார் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு தீவிரமாக விசாரித்த போது இந்த ஆபாச பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களை திரட்டி வந்த போலீசார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

  இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இத்தனை நாட்களாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ஷில்பா ஷெட்டி முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் எழுதிய புத்தகத்தின் சில முக்கிய வரிகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார். அதில், ’நடந்ததை நினைத்து கோபமோ அல்லது நடக்கப்போவதை நினைத்து பயமோ கொள்ளாதே. ஆனால், நடப்பில் விழிப்புடன் இரு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  Also read: kajal aggarwal : நனைந்த உடையில் நடிகை காஜல் அகர்வால்- ஹாட் புகைப்படங்கள்

  மேலும், நம்மை காயப்படுத்தியவர்களை நினைத்து கோபம் கொள்வோம், வருங்காலங்களில் வாய்ப்புகளை இழந்துவிடுவோம் என்றோ, நோயால் அவதியடைவோம் என்றோ அல்லது அன்புக்குறியவர்களை இழந்துவிடுவோம் என்று நாம் பயந்துகொண்டு இருப்போம். ஆனால், அப்படி இருக்க தேவையில்லை. நடந்ததை நினைத்து கோபப்படவோ, அல்லது வருகாலங்களில் ஏற்படப்போகும் கஷ்டங்களை நினைத்து வருந்துவதை விடுத்து, நடப்பில் தெளிவுடன் இருப்போம்.

  Also read: Katrina Kaif : இஞ்சி இடுப்பழகி! பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் போட்டோஸ்

  நான் கடந்த காலங்களிலும் பல சோதனைகளை கடந்துவந்துள்ளேன். எதிர்காலங்களிலும் அதனை கடந்து வருவேன். நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவும் எனக்கு தடையாக இருக்காது என்று அவரின் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  எனினும், இந்த பதிவில் ஷில்பா ஷெட்டி தனது சொந்த கருத்தை எதுவும் தெரிவிக்காமல், தனது தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக உள்ள இந்த புத்தகத்தின் பக்கத்தை மட்டும் பதிவிட்டுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: