• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sherlyn Chopra : பொய் புகார் - 50 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல நடிகைக்கு நோட்டீஸ்

Sherlyn Chopra : பொய் புகார் - 50 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல நடிகைக்கு நோட்டீஸ்

 ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா

shilpa shetty, Raj kundra : 50 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

  • Share this:
    பொய் புகார் அளித்த ஷெர்லின் சோப்ரா 50 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில் சமீபத்தில் புயலடித்தது நினைவிருக்கலாம். ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார், வாட்ஸ் ஆப்பில் வைரலாக்கினார் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல நடிகைகள், ஆடிசனில் நிர்வாணமாக நடிக்க வற்புறுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். இந்த வழக்கில் இப்போதுதான் ஜாமின் வாங்கி வெளியே வந்துள்ளார் ராஜ் குந்த்ரா.
    இவர் மீதும், ஷில்பா ஷெட்டி மீதும் நடிகை ஷெர்லின் சோப்ரா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மிரட்டல், துன்புறுத்துதல், மோசடி என பல பிரிவுகளில் இந்தத் தம்பதியினர் மீது ஷெர்லின் சோப்ரா குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஷெர்லின் சோப்ராவுக்கு ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    also read : நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்.. படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

    அதில் ஷெர்லின் சோப்ராவின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் இந்த தம்பதியினர், விளம்பரம் தேடும் நோக்கில் ஷெர்லின் சோப்ரா இந்த புகாரை தந்திருப்பதாகவும், அவதூறு செய்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஷெர்லின் இந்த புகாரை தந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். பத்திரிகை மற்றும் டிஜிட்டல் மீடியா வழியாக ஏழு தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், 50 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவின் நோட்டீஸுக்கு ஷெர்லின் சோப்ரா தரப்போகும் பதிலடிக்காக பாலிவுட் ஆவலுடன் காத்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: