குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்கா நடித்து விரைவில் வெளியாகவுள்ள Double XL படத்தில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடித்துள்ளார். ஹூமா குரேஷியுடன் அவர் டான்ஸ் ஆடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் ரிலீஸ்.. தியேட்டர் லிஸ்டுடன் போஸ்டர் அடித்த துணிவு ரசிகர்கள்! மதுரை மாஸ்!
கிரிக்கெட்டில் ஜொலித்த ஷிகர் தவானுக்கு இப்படமே பாலிவுட்டின் அறிமுகமாகும். அப்படத்தில் ஷிகர் நடித்த காட்சிகளின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகும் நிலையில் கருப்பு கோட்ஷூட்டும், அவருக்கே உரித்தான ஹேஸ் டைலுடனும் அவர் உள்ளார். காலா படத்தில் நடித்து புகழ்பெற்ற ஹூமாவுடன் டான்ஸ் ஆடுகிறார் ஷிகர்.
When Rajshri from Meerut and Saira from Delhi found each other, it was time for double trouble. Be prepared for double the fun. Double the excitement. Double the entertainment. 😍#Double XL in cinemas near you on 4th November 2022. #baatmeinWAZANhai pic.twitter.com/8SRbfxo6wI
— Huma Qureshi (@humasqureshi) October 10, 2022
Double XL திரைப்படம் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது. ஹெல்மெட் படத்தை இயக்கிய ராட்ராம் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் போஸ்டர்களும் ஏற்கெனவே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படம் நவம்பர் 4ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் கதை தனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் இப்படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய நாட்டுக்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரனாக எனக்கு வாழ்க்கை மிகவும் நெருக்கடியாகவே இருக்கும். எனக்கு பிடித்த பொழுதுபோக்கே நல்ல திரைப்படங்களைப் பார்ப்பதுதான். எனக்கு படம் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது நான் கதையைக் கேட்டேன். அந்தக்கதை எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இப்படம் ஒரு அழகான விஷயத்தை நம் சமூகத்துக்கு சொல்லும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bollywood, Shikhar Dhawan