• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சேர்ஷா - விஷ்ணுவர்தனை இருட்டடிப்பு செய்யும் இந்தி ஊடகங்கள்

சேர்ஷா - விஷ்ணுவர்தனை இருட்டடிப்பு செய்யும் இந்தி ஊடகங்கள்

ஷேர்ஷா படக்குழுவினர்

ஷேர்ஷா படக்குழுவினர்

சேர்ஷா குறித்த செய்திகளில் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தனின் பெயர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது.

  • Share this:
    அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சேர்ஷா திரைப்படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. பில்லா, பட்டியல் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஒரு படத்தின் கேப்டன் ஆஃப் தி ஷிப் என்பவர் இயக்குனர். ஆனால், சேர்ஷா படம் குறித்த செய்திகளில் திட்டமிட்டு விஷ்ணுவர்தனின் பெயரை தவிர்த்து வருகின்றன இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள்.

    கார்கில் போரின் போது வீர மரணமடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் போர் சாகஸங்களை தழுவி சேர்ஷா எடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த் மல்கோத்ரா விக்ரம் பத்ராவாக நடித்துள்ளார். கியாரா அத்வானி நாயகி. கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்திருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சேர்ஷா குறித்த செய்திகளில் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தனின் பெயர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. அதற்குப் பதில் படத்தின் நாயகன் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் பெயர்களே திரும்பத் திரும்ப முன்நிறுத்தப்பட்டன. படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையிலும் இந்த நிலையே நீடிக்கிறது.

    தென்னிந்தியாவிலிருந்து செல்லும் நடிகர்களையும், இயக்குனர்களையும் திட்டமிட்டே புறக்கணிக்கும் போக்கு இந்தி திரையுலகில் உண்டு. அதன் விளைவுதான் விஷ்ணுவர்தனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதும். தரண் ஆதர்ஷ் போன்ற விமர்சகர்கள் சேர்ஷா குறித்த தங்களின் பதிவுகளில் விஷ்ணுவர்தனின் பெயர் இடம்பெறாமல் கவனமாக தவிர்த்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: