Shershaah - ஆகஸ்ட் 12-ல் வெளியாகும் கார்கில் ஹீரோ திரைப்படம்!

கார்கில் ஹீரோ படம்

கார்கில் போரில் எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்து, தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர் கேப்டன் விக்ரம் பத்ரா.

  • Share this:
    சேர்ஷா திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி, அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகிறது. கார்கில் ஹீரோ கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

    22 வருடங்களுக்கு முன் நடந்த கார்கில் போர் இந்தியர்களால் மறக்க முடியாத ஒன்று. அந்தப் போரில் எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்து, தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர் கேப்டன் விக்ரம் பத்ரா. அவருக்கு அரசு பரம் வீர் சக்ரா விருது அளித்து கௌரவித்தது. அவரது வாழ்க்கை வரலாறை பின்னணியாக வைத்து தயாராகியிருக்கும் படம், சேர்ஷா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நம்மூர் விஷ்ணுவர்தன் இதனை இயக்கியுள்ளார். இவரது முதல் இந்திப் படம் இது. விக்ரம் பத்ராவாக சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் கியாரா அத்வானி. கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

    பெரும் பொருட்செலவில் தயாரான இந்தப் படத்தை ஜுலையில் வெளியிடுவதாக இருந்தனர். ஊரடங்கால் அது நடக்கவில்லை. திரையரங்குகள் திறப்பது மேலும் தள்ளிப்போனதால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகின்றனர். பெரும் தொகைக்கு அமேசான் பிரைம் வீடியோ படத்தை வாங்கியுள்ளது. இன்று பட வெளியீடு குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தனர். அதன்படி, ஆகஸ்ட் 12 படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: